தனுசு ராசி அன்பர்களே.! கடின உழைப்புக்கு இறைவனின் அருளால் தனவரவு இருக்கும்.
இன்றைய நாள் முன்னேற்றம் காண முக்கிய முடிவுகளை எடுக்கும் நாளாக இருக்கும். நம்பிக்கைகள் கண்டிப்பாக நடந்துவிடும். அலுவலக பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் தீர்ந்துவிடும். அறச் செயல்கள் யாவும் நன்மையை கொடுக்கும். பிள்ளைகளின் பழக்கவழக்கங்கள் நல்லபடியாக இருக்கும். பால்ய நண்பர்களின் சந்திப்பு மனதிற்குள் மகிழ்ச்சி ஏற்படும். விவேகம் இருக்கும். சக நண்பர்களுக்கு அனுசரணையாக புதிய ஆலோசனையையும் கொடுப்பீர்கள். தைரியமாக எந்த ஒரு முடிவையும் எடுக்கலாம். குடும்ப கவலையை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம். கடின உழைப்புக்கு இறைவனின் அருளால் தனவரவு இருக்கும்.
உறவை வைத்துக் கொண்டு அதை சிறப்பாக வாழ்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். மாணவர்களுக்கு இன்றைய நாள் கல்வியில் வெற்றி கொள்ள முடியும். கல்வியில் முன்னேற்றத்தைக் காண முடியும். மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றி வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்