தனுசு ராசி அன்பர்களே.! மகிழ்ச்சி உண்டாகும்.
இன்று வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். ரொம்ப நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இல்லம் தேடி இனிய தகவல்கள் வரக்கூடும். உத்யோக உயர்வு உறுதியாகும். வரன்கள் வாயில் தேடி வர கூடும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெற முடியும். எதிர்பார்த்த கடனுதவிகள் தடையின்றி கிடைப்பதால் தொழிலில் அபிவிருத்தி கிடைக்கும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய பயணம் லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தனவரவு தாராளமாக இருக்கும். நீண்டநேரம் பணிபுரியக்கூடிய சூழல் இருக்கும்.
தடைபட்ட திருமண பேச்சு வார்த்தைகள் மீண்டும் தொடங்கும். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாள். பொறுமை காக்கும் நாள். உங்களுடைய பொறுமைக்கும் நல்ல பலன் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற கூடிய அம்சங்கள் இருக்கின்றது. கல்வியில் எடுக்கக்கூடிய முடிவுகளில் தெளிவு இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டு வாருங்கள் நல்ல செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்