தனுசு ராசி அன்பர்களே.! அனுகூலமான காரணிகள் வளம்பெறும்.
பல நாள் தாமதமான பணி ஒன்று இப்பொழுது எளிதாக நிறைவேறும். ரொம்ப நாட்களாக கஷ்டப்பட்டு செய்யும் வேலைக்கு இப்போது தீர்வு கிடைக்கும். விழிப்புணர்ச்சியுடன் எதையும் சிறப்பாக செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். அனுகூலமான காரணிகள் வளம்பெறும். வாழ்க்கையில் நல்லது நடக்கும். லாபத்தை ஈட்டிக் கொடுக்கும் பணியில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் பெரிய அளவில் பிரச்சினைகள் இருக்காது. சந்தோஷமான சூழலில் இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் சந்தோஷமாக இருக்கும். காரியத்தில் உள்ள தடை தாமதங்கள் அனைத்தும் விலகி செல்லும். மனதிற்குள் அவ்வப்போது பயம் வந்து சேரும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கு நல்ல பலனை அடைய முடியும். யாரைப் பற்றியும் விமர்சனங்கள் செய்ய வேண்டாம்.
குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் அதனை நீங்கள் சரி செய்து கொள்ள வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு சிரமங்கள் குறைந்துவிடும். சிக்கல்கள் தீர்ந்து விடும். காதல் கண்டிப்பாக கைகூடி விடும். மாணவர்களுக்கு தைரியம் கூடும். கல்வி பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் நாம் என்ன பண்ணப் போகிறோம் என்று அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். பெற்றோர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை