தனுசு ராசி அன்பர்களே.! உழைப்புக்கேற்ற நல்ல பலன் இருக்கும்.
இன்றைய நாள் திட்டமிடாத பணிகள் கூட வெற்றி வாய்ப்புகள் எளிமையாக இருக்கும். நல்ல செயல்கள் செய்து நல்ல பலனை அடைவீர்கள். அனுகூலமான பலன்கள் கண்டிப்பாக தேடிவரும். தைரியமாக எந்த ஒரு வேலையிலும் ஈடுபடலாம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கடுமையான உழைப்பு இருக்கும். உழைப்புக்கேற்ற நல்ல பலன் இருக்கும். உங்களை பார்த்து மற்றவர்கள் பொறாமைபடுவார்கள் என்றாலும் உங்கள் வளர்ச்சியை நீங்கள் அதிகப்படுத்த வேண்டும். அதற்கு பொறுமை அவசியம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது எப்போதும் சிறப்பை கொடுக்கும்.
வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக சென்று வர வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கும். காதலை சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் காதல் உங்களுக்கு எதிராக அமைந்து விடும். விட்டுக்கொடுத்துச் சென்றாலே எல்லா பிரச்சினையும் சரியாகிவிடும். மாணவர்கள் படிப்பு மீது அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். படிப்பை தவிர வேறு எதிலும் அக்கறை செலுத்த வேண்டாம். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்கள் காதல் உற்சாகத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் எல்லாம் நல்லதாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு