தனுசு ராசி அன்பர்களே.! மனவருத்தங்கள் இருக்கும்.
இன்று உங்களுக்கு அவசர பணி தொந்தரவைக் கொடுக்கும். அக்கம்பக்கத்தினருடன் அதிகமாக பேசக்கூடாது. தொழில் வியாபாரத்திலிருந்த அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். வாகன பராமரிப்பு தேவைப்படும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியைக் கொடுக்கும். உற்றார் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையை கொடுக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். மனதிற்குள் வருத்தங்கள் இருக்கும். குழப்பங்களும் ஓடிக்கொண்டிருக்கும்.
தேவையற்ற பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். தேவையற்ற சகவாசத்தை கண்டிப்பாக முடித்துக் கொள்ள வேண்டும். விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். தெளிவாக பேச வேண்டும். பக்குவமாகவும் தெளிவாகவும் பேச வேண்டும். காதல் சிரமத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை இருக்கும். பாடங்களை தெளிவாக படிக்க கூடிய ஆற்றல்கள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்யுங்கள் கண்டிப்பாக முன்னேற்றம் இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு