தனுசு ராசி அன்பர்களே.! புதிய நபர்களின் அறிமுகம் இருக்கும்.
நேற்றைய பிரச்சனைகளுக்கு இன்று நல்ல முடிவை கொடுக்கும். நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும். விட்டுப் போன உறவுகள் வந்து சேரும். திருமணத்திற்காக காத்திருந்த வரன்கள் கண்டிப்பாக நல்ல விதத்தில் வந்து முடியும். அதனை சரியான முறையில் நீங்கள் தேர்ந்தெடுத்து முடிக்க வேண்டும். மனதிற்குள் குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் சீர்படும். திறமையாக செயல்பட்டு காரியத்தில் சிறப்பாக செய்ய முடியும். பாராட்டுக்களை பெற முடியும். சின்ன விஷயத்திற்கு கோபம் வரும். ஆனால் அதனை மட்டும் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். வரவு ஒரு பக்கம் செலவு ஒரு பக்கம் இருக்கும். நிதானத்தை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். வேற்றுமொழிப் பேசுபவர்களால் நன்மை என்பது கண்டிப்பாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் இருக்கும்.
சொந்த தொழிலை விரிவுபடுத்த கூடிய எண்ணங்கள் இருக்கும். சுய தொழிலில் வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும். காதல் கைகூடும். காதல் பிரச்சனையை கொடுத்தாலும் பின்னர் சரியாகும். காதலில் வெற்றி சுலபமாக கிடைக்கும். மாணவர்களுக்கு தைரியம் பிறக்கும். கல்வியில் எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். மாணவர்கள் கல்விக்காக எடுத்துக்கொண்ட நேரம் கண்டிப்பாக சிறப்பை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் பிங்க்