Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! செலவுகளை குறைக்க வேண்டும்….! வாக்குவாதம் செய்ய வேண்டாம்….!!

தனுசு ராசி அன்பர்களே.! கையில் காசு பணம் புரளும்

இன்று தேவையான பணம் இருப்பதால் திடீரென ஏற்படும் செலவுகளை சமாளித்துவிடுவீர்கள். கஷ்டங்கள் கண்டிப்பாக தீர்ந்துவிடும். வாழ்க்கைத்துணை யோசனையை கொடுப்பார்கள். அவர்களின் யோசனையை ஏற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கை துணையிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதனை வாங்கிக் கொடுப்பீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அந்த வேலையை சிறப்பாக முடித்து கொடுப்பீர்கள். அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். பாராட்டு பெறுவீர்கள். எதிர்பார்த்த லாபம் இருக்கும். கடன் பிரச்சினைகள் சரியாகும். போட்டி பொறாமைகள் விட்டுச்செல்லும். வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். உங்களைப் பற்றி தவறான எண்ணம் கொண்டவர்கள் இப்பொழுது சரியாக புரிந்து கொண்டு நடப்பார்கள். பாக்கிகளை வசூல் செய்யும் போது வேகம் காட்ட வேண்டாம். விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். பணவரவு தாராளமாக இருக்கும். கையில் காசு பணம் புரளும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

சேமிக்கக்கூடிய எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. அனைவரையும் அனுசரித்துச் சென்றால் மென்மேலும் முன்னேற்றகரமாக இன்றைய நாளை வழிநடத்திச் செல்ல முடியும். காதலில் உள்ளவர்களுக்கு சின்ன சின்ன சிக்கல்கள் இருக்கும். காதலில் புரிந்து கொள் கொள்ளக் கூடிய சூழல் இருக்கும். கடினமான சூழ்நிலை ஏற்பட்டு இருந்தாலும் அது இப்போது படிப்படியாக குறையும். சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றார்போல் முடிவெடுக்க வேண்டும். மாணவர்கள் படிப்பை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த வேண்டாம். மாணவர்கள் முன் கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:  4 மற்றும் 6                                                                                                                          அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் சிவப்பு

Categories

Tech |