Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! வாய்ப்புகள் கிடைக்கும்….! நிர்வாகத்திறமை பளிச்சிடும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! நிதி மேலாண்மை உயர்ந்துவிடும். 

இன்று நல்ல நல்ல வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதற்கான சிறப்பான சூழல் உங்களிடம் இருக்கின்றது. வெற்றி செய்திகள் எல்லாம் வீடு வந்து சேரும். வீட்டை பழுது பார்க்க கூடிய எண்ணங்கள் இருக்கும். சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். பகை உணர்வு மாறிவிடும். விட்டுப் போன உறவுகள் மீண்டும் உறவாட கூடும். சகோதர வழியில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல பலன் கிடைக்கும். மென்மேலும் உங்களால் முன்னேறிச் செல்ல முடியும். வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்க்கவேண்டும். பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கும். பணியில் இருந்த தொய்வடைந்த நிலை மாறிவிடும். மனதில் நிம்மதி இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகள் எடுக்க கூடிய ஆற்றல் இருக்கின்றது. நிர்வாகத்திறமை பளிச்சிடும். நிதி மேலாண்மை உயர்ந்துவிடும். தேவைக்காக வாங்கிய கடன்களை எல்லாம் இப்பொழுது அடைத்து விடுவீர்கள்.

காசு பணம் புரளும். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். தடை தாமதங்கள் எல்லாம் சரியாகிவிடும். காலதாமதமாக நடந்த காரியங்கள் கூட இப்பொழுது சூடுபிடிக்கும். விழிப்புணர்ச்சியுடன் செயல்பட்டு எல்லா விதமான வெற்றி வாய்ப்புகளையும் நீங்கள் ஏற்படுத்திக் கொள்வீர்கள். பெண்கள் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு தடை தாமதங்கள் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். காதலில் வெற்றி கிடைக்கும். காதலின் மனமுறிவு சில நேரங்களில் பெரிய அளவு வருத்தத்தை கொடுக்கும். அதனால் பேச்சில் கொஞ்சம் கவனம் வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் நீலம்

Categories

Tech |