தனுசு ராசி அன்பர்களே.! பணத்தேவைகள் அதிகமாக இருக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் கடினம். குடும்பத்திலும் நிம்மதி கொஞ்சம் குறையும். பணவரவு இல்லாததினால் கொஞ்சம் தேவைகளும் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத்தில் பணத்தேவைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். கடன் விவகாரங்களில் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். பேசும்போது வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம். கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வில்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதம் ஆகியவற்றை பயன்படுத்துபவர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
எதிர்பார்த்துக் கொண்டிருந்த தொகை கொஞ்சம் கால தாமதமாகத்தான் வந்து சேரும். உடல் சோர்வு ஏற்படும். குடும்பத்தைப் பொறுத்தவரை சகோதர சகோதரிகளிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். அவரிடம் நீங்கள் கோபம் கொள்ள வேண்டாம். காதலில் உள்ளவர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். காதல் உங்களுக்கு மன வருத்தத்தை கொடுக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை இல்லாதவர்கள் போல் இருப்பார்கள். விளையாட்டுத் துறையில் ஆர்வம் அதிகமாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிற ஆடையை அணிய வேண்டும். வெளிர் நீல நிறம் ஆடை உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்தால் கண்டிப்பாக உங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் வெள்ளை