தனுசு ராசி அன்பர்களே.! நிதானம் தேவை.
இன்று சிலரின் தவறை சுட்டிக் காட்டுவதன் மூலம் வீண் சச்சரவுகளில் சிக்குவீர்கள். தேவையில்லாத விவகாரங்களில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தர்மசங்கடமான சூழலை சமாளிக்க வேண்டிய சூழல் இருக்கும். திடீர் கோபங்கள் உண்டாகும். நிதானமாக இருப்பது நல்லது. புத்தி சாதுரியத்தால் எதையும் சாதிக்க முடியும். எதையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. தெளிவான சிந்தனை இருக்கும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்ய வேண்டும்.
நண்பரிடம் கோபங்கள் காட்ட வேண்டாம். ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். திருமண தடைகள் விலகி செல்லும். காதலில் உள்ள பிரச்சனைகளும் சிரமங்களும் கண்டிப்பாக தீர்ந்து விடும். காதல் கைகூடி திருமணத்தில் முடிய கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும். கல்வி பற்றிய அக்கறை உண்டாகும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீலம்