Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! தடைகள் ஏற்படும்….! கவனம் வேண்டும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! சிக்கல்கள் இல்லாமல் எதையும் செய்ய பார்ப்பீர்கள். 

இன்று பயணங்கள் போன்ற விஷயங்களில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக  செய்ய வேண்டும். தடைகள் ஏற்பட்டாலும் அதனை கவனமாக கையாள வேண்டும். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் சில சோதனைகளும் வேதனைகளும் வரக்கூடும். பார்த்து பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். உறவினர்கள் மத்தியில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் எழும். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் வந்துவிடும். நிதானமான போக்கு வெளிப்படும். உயர்ந்த எண்ணங்கள் உருவாகும். சிறப்பாக செய்யக்கூடிய சூழல் இருக்கும். குடும்பத்தை பொருத்தவரை பிரச்சனைகள் இல்லை. கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் எழும். நிதானமாக அணுகவேண்டும். சிந்தனைத் திறனை அதிகப்படுத்துவீர்கள். சிக்கல்கள் இல்லாமல் எதையும் செய்ய பார்ப்பீர்கள். பாவ புண்ணியம் பார்த்து எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள்.

உறவினர் மத்தியில் மரியாதை இருக்கும். மாணவர்களுக்கு எதையும் சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றல் இருக்கும். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். மாணவர்கள் படிப்பை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தக் கூடாது. காதல் விவகாரம் கசப்பை ஏற்படுத்தும். காதலில் கவனமாக இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். மற்றவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                                    அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: கருநீலம் மற்றும் நீலம்

Categories

Tech |