தனுசு ராசி அன்பர்களே! பொறுமையாக செயல்பட வேண்டும்.
இன்று செயலில் திருப்பங்கள் ஏற்படும். உண்மை நிலவரம் உணர்ந்து செயல்பட வேண்டும். உண்மை நிலவரம் தெரியாமல் அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம். தொழில் வியாபாரம் நடை முறை சுமாராகத்தான் இருக்கும். வரவை விட செலவு அதிகமாக இருக்கும். வாகனத்தில் பொறுமையாக சென்று வரவேண்டும். அவசரப்பட வேண்டாம். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். சில காரியங்களில் மன குழப்பம் ஏற்படும். கவலைப்பட வேண்டாம். பயணங்கள் சாதகமான பலனை கொடுக்கும். ரொம்ப நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும்.
அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். காதலில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். காதல் சிக்கலை ஏற்படுத்தும். காதல் திருமணத்தில் முடிவதற்குள் சிரமங்கள் பட வேண்டும். மாணவர்கள் படிப்பை தவிர வேறு எதிலும் அக்கறை செலுத்த கூடாது. இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்