தனுசு ராசி அன்பர்களே.! கடன் பிரச்சினைகள் கண்டிப்பாக தீர்ந்துவிடும்.
இன்று மனதில் பல நாட்களாக இருந்த சங்கடங்கள் தீர்ந்து விடும். பிரச்சனைகள் எல்லாம் குறைந்து விடும். மனதிற்குள் சந்தோஷம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணியை ஆரோக்கியத்துடன் செய்வீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி விடுவீர்கள். கலைத்துறையினர் அனைத்து விதமான நிலையிலும் நன்மை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் எல்லாம் சிறப்பாக நடக்கக் கூடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியங்களைக் கூட உங்களால் சிறப்பாக செய்ய முடியும். விழிப்புணர்ச்சியுடன் இருப்பீர்கள். உணர்ச்சிகரமாக பேசுவீர்கள். நிலைமை கட்டுக்குள் இருக்கும். கடன் பிரச்சினைகள் கண்டிப்பாக தீர்ந்துவிடும்.
மனதில் இருந்த கஷ்டங்கள் படிப்படியாக குறையும். காதலில் உள்ளவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். காதலில் சில முடிவுகளை எடுக்க முடியாத குழப்பங்கள் இருக்கும். இந்த காதல் நமக்கு தேவைதானா என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். பார்த்து பக்குவமாக முடிவுகள் எடுக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் அக்கறை கொள்ள வேண்டும். விளையாட்டுத் துறையில் ஆர்வம் அதிகமாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் மஞ்சள்