தனுசு ராசி அன்பர்களே.! கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இன்று நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் எதிர்பார்த்த பலன்களை பெறுவதில் சிக்கல்கள் இருக்கும். தேவையற்ற பொழுது போக்குகளும் நண்பர்களின் சேர்க்கைகளும் வீண் பிரச்சனைகளை உண்டாக்கிவிடும் என்பதால் கவனத்துடன் செயல்படவேண்டும். பொறுமை தேவை. புதிய முயற்சிகளை தள்ளிப் போடவேண்டும். தீ, ஆயுதங்கள் போன்றவற்றை பயன்படுத்தும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன் மனைவிக்கு இடையே எந்த மனவருத்தமும் இருக்காது. குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சாமர்த்தியமான பேச்சு வெளிப்படும்.
வருமானம் வருவதற்கு காலதாமதம் ஏற்படும். செலவுகளை முன்கூட்டியே திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். காதல் தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும். எதையும் விட்டுக் கொடுத்து வார்த்தைகளை கவனித்து பேசவேண்டும். வாக்கு வாதங்கள் எதுவும் செய்ய வேண்டாம். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும். ஒருமுறைக்கு இருமுறை எதையும் யோசித்து செய்ய வேண்டும். பெற்றோர்கள் சொல்படி நடந்து கொள்வது நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பிங்க்