Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! அலைச்சல் ஏற்படும்….! விட்டுக்கொடுக்க வேண்டும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! குடும்ப வாழ்க்கையில் சுகமும் நிம்மதியும் கிடைக்கும்.

இன்று செயல்களில் தேவையான சீர்திருத்தம் வேண்டும். எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அந்த வேலை நிமித்தமாக மட்டும்தான் கவனம் இருக்க வேண்டும். பொறாமை உள்ளவர்களின் விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம். உங்களை தவறாக பேசுபவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். தொழிலில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. பணவரவை விட செலவு தான் அதிகமாக இருக்கும். வீண் அலைச்சலைக் குறைத்துக் கொள்ள வேண்டும். திடீர் செலவை கட்டுப்படுத்த வேண்டும். கடன் வாங்கக் கூடிய சூழல் இருக்கும்.  யாரிடமும் முன்கோபங்கள் காட்ட வேண்டாம். சுபகாரியங்கள் நடக்கும். குடும்ப வாழ்க்கையில் சுகமும் நிம்மதியும் கிடைக்கும்.

வார்த்தைகளில் தெளிவு வேண்டும். குழப்பமான சூழல் இருக்கும். விட்டுக்கொடுத்து செல்வது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். தைரியமாக இருக்க வேண்டும். ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் ஆர்வமுடன் வேகமுடன் ஈடுபடுவீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு காதல் பிரச்சனையை கொடுக்காது. காதல் மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். மாணவர்கள் தைரியமாக இருந்து எந்த ஒரு காரியத்திலும் வெற்றி பெறமுடியும். எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   4 மற்றும் 7                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் அடர் நீலம்

Categories

Tech |