தனுசு ராசி அன்பர்களே.! நிதானத்தை நீங்கள் எப்பொழுதும் கைவிட்டுவிட வேண்டாம்.
இன்று உயரதிகாரிகள் ஒத்தாசையாக இருப்பார்கள். வழக்கமாக செய்யும் பணிகளில் இன்று சில மாற்றங்களைச் செய்வீர்கள். இளைய சகோதரர்களால் நன்மை கிட்டும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ள நெருக்கடிகளை உங்களால் சமாளிக்க முடியும். சிந்தனையை அதிகப்படுத்திக் கொள்வது நல்லது. எது தீமை எது நன்று என சரியான முறையில் அணுகி உங்கள் வாழ்க்கையை வெற்றி பாதையை நோக்கி எடுத்துச் செல்கிறீர்கள். நெருக்கடியால் எதையும் சமாளிக்க கூடிய தெம்பு இருக்கும். புது வியாபாரம் தொடர்பான காரியம் சாதகமாக முடியும். புதிய வேலை கிடைப்பதற்கான சூழல் அமையக் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாகவே இருக்கும். நிதானத்தை நீங்கள் எப்பொழுதும் கைவிட்டு விட வேண்டாம். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாகப் அணுகி அனுபவத்தை பெறுவீர்கள்.
பணத்தட்டுப்பாடு விலகும். செலவை விட பணவரவு அதிகமாகவே இருக்கின்றது. சேமிக்கக்கூடிய எண்ணங்கள் இருக்க வேண்டும். காதல் சில நேரங்களில் பிரச்சனையை கொடுக்கும். சில நேரங்களில் சந்தோஷத்தை கொடுக்கும். இரண்டும் கலந்தே காணப்படும். மாணவர்களும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் யோசித்துதான் செயல்பட வேண்டும். விளையாடும் போது மூர்க்கத்தனமாக விளையாட வேண்டாம். பார்த்து பக்குவமாக விளையாட வேண்டும். சக நண்பர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதினால் சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் பிங்க்