தனுசு ராசி அன்பர்களே.! சொந்த நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்று உங்களுடைய பேச்சில் மங்கள தன்மை நிறைந்து காணப்படும். தொல்லை கொடுத்தவர்கள் காணாமல் போவார்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பணவரவு அதிகரிப்பதால் சேமிப்பு கிடைக்கும். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கட்டளையிடும் பதவி கண்டிப்பாக கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். உயர்ந்த எண்ணங்கள் இருக்கும். உயர்வான சூழல் இருக்கும். எல்லா விதத்திலும் உங்களுக்கு நன்மை இருக்கும். தாராள மனம் கொண்டவர்களாக இருப்பீர்கள். வாழ்க்கையில் செல்வம் கண்டிப்பாக சேரும். எதிர்காலம் குறித்த திட்டங்கள் இருக்கும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருப்பீர்கள். சொந்த நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கோபத்தை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும். தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள். பெண்கள் சில காரியங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காதல் விவகாரங்களில் கோபம் வெளிப்படும். அதனால் பொறுமையாக பக்குவமாக எதையும் கையாள வேண்டும். மாணவர்களுக்கு சிந்தனை அதிகரிக்கும். கல்வியில் நினைத்ததை விட கூடுதலாக உழைத்து வெற்றி பெறக்கூடிய சூழல் இருக்கும். எல்லா விதமான நல்லதும் நடக்கும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் மஞ்சள்