தனுசு ராசி அன்பர்களே.! குழப்பங்கள் ஏற்படும்.
இன்று உங்களுக்கு அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும். வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும். தொழில் விருத்தி அடையும். காரியத்தடை தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டாலும் ஓரளவு தனவரவு கிடைக்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாது. குழப்பங்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் கிடைக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து அவர்களின் மதிப்பை உங்களால் பெற முடியும்.
செல்வம் சேர்ந்துவிடும். செல்வாக்கு கூடும். பண உதவி கிடைக்கும். காதல் மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். காதல் கைகூடி இன்பத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு எதையும் செய்யக்கூடிய ஆற்றல் இருக்கின்றது. கல்வியில் முன்னேற கூடிய அமைப்பு இருக்கின்றது. மாணவர்கள் எதையும் சிறப்பாக செய்ய முடியும். மேற்கல்விகாண முன்னேற்றம் சிறப்பாக இருக்கின்றது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை