தனுசு ராசி அன்பர்களே.! பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
நண்பரின் உதவியால் முக்கியமான விஷயங்களுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற்று புதிய சாதனை உருவாகும். உபரி பண வருமானம் கிடைக்கும். மாணவர்களுக்கு ஞாபகத்திறன் வளர்ந்து படிப்பில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் அதிகப்படியான அக்கறை இருக்கும். பிரச்சனைகள் எதுவும் இருக்காது. வழக்கில் வெற்றி வாய்ப்புகள் எளிமையாக கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் வெற்றியைக் கொடுக்கும். தவறான வழிமுறைகளில் செல்வம் கரையக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. இல்ல தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும். மதிநுட்பத்துடன் செயல்படும் நாள். புத்தி கூர்மை வெளிப்படும். காதல் கைக்கூடி இன்பத்தை கொடுக்கும். நல்ல புரிதல்கள் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை