Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! வார்த்தையில் தெளிவு இருக்கும்….! மகிழ்ச்சி அதிகரிக்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! சுபகாரிய பேச்சுகள் நல்ல விதத்தில் நடக்கும்.

திருமண சுபகாரிய பேச்சுகள் நல்ல விதத்தில் நடக்கும். உங்களுடைய வார்த்தைகளில் தெளிவு இருக்கும். சாதகமான பலனை பெற முடியும். உற்றார் உறவினர்கள் பிரச்சினைகளை மறந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். சகோதர சகோதரிகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகளை எடுப்பது நன்மை தருவதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படும். அதனை மட்டும் சரி செய்து கொள்ள வேண்டும். நிதி நெருக்கடி ஏற்பட்டாலும் சமாளிக்கக்கூடிய சூழ்நிலை இருக்கும்.

சிலருக்கு புதிய தொழில் ஆரம்பிக்க கூடிய சூழ்நிலை இருக்கும். காதல் கைக்கூடி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய அக்கறை ஓடிக்கொண்டிருக்கும். கல்வியில் உங்களால் சாதிக்க முடியும். கல்விக்காக நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 6                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: இளம் மஞ்சள் மற்றும் இளம் பச்சை

Categories

Tech |