தனுசு ராசி அன்பர்களே.! தடை தாமதம் ஏற்படலாம்.
இன்று தொட்ட காரியம் துளிர்விடும். தொகைகள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நடைபெறும். காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலனை பெற முடியும். சக மனிதர்களை அனுசரித்து செல்ல பாருங்கள். தேவையில்லாத விவகாரங்களில் ஈடுபடவேண்டாம். எதிர்பார்த்த காரியங்கள் கொஞ்சம் அலைச்சலுடன் முடியும். பெரியோர் ஆசிரியரின் அரவணைப்பு மாணவர்களுக்கு இருக்கின்றது. அதனால் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும். கல்வி பற்றிய பயமும் விலகி செல்லும். கல்வியில் சாதிக்கக்கூடிய அம்சம் இருக்கிறது.
கணவன் மனைவி இருவரும் அனுசரித்து செல்ல வேண்டும். நண்பர்கள் உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்வதும் நன்மையை கொடுக்கும். சிலருக்கு காதலில் வயப்படகூடிய சூழல் இருக்கின்றது. மனதிற்கு பிடித்தவரை கரம்பிடிக்க கூடிய சூழல் சிலருக்கு இருக்கின்றது. அதனால் இன்பமும் துன்பமும் கலந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீலம்