தனுசு ராசி அன்பர்களே.! பாராட்டுகளை பெறுவீர்கள்.
இன்று கம்பீரமாக பேசி சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதியவர்களின் நட்பும் கிடைக்கும். தேவையில்லாத நட்புகளை மட்டும் சரி செய்து கொள்ள வேண்டும். வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாள வேண்டும். காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வல்லமை வாய்ந்தவர்களாக இருப்பீர்கள். பணவரவு நல்லபடியாக இருக்கும். உங்களுடைய செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிச் செல்வார்கள். வியாபாரத்தில் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேலதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டுகளை பெறமுடியும்.
நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பதவி உயர்வு உங்களைத் தேடி வரும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். காதலில் எதிரும் புதிருமாக இருந்தவர்களுக்கு சூழ் நிலை சிறப்பாக அமையும். மனதிற்குள் சந்தோஷம் பிறக்கும். காதல் கைகூடி இன்பத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு தைரியம் கிடைக்கும். கல்வியில் வெற்றி கிடைக்கும். சிந்தனையில் புதிய மாற்றம் பிறக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீலம்