Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! எச்சரிக்கை தேவை….! பணிச்சுமை அதிகமாக இருக்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! கவனமாக செயல்பட வேண்டும்.

இன்று நிதானித்து செயல்பட வேண்டும். வியாபாரம் வழக்கத்தைவிட மிக சிறப்பாக நடக்கும். இன்று பணிச்சுமை அதிகமாக இருக்கும். சீரான பணவரவு கிடைக்கும். பெண்கள் நகைகளை இரவல் கொடுத்து வாங்க வேண்டாம். பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெரிய பிரச்சனைகள் இருக்காது. எடுத்த காரியத்தை எப்படியாவது செய்து முடித்து விட வேண்டும் என்ற வைராக்கியமும் மன உறுதியும் உங்களிடம் இருக்கும். கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கின்றது. பெற்றோர்களின் ஆசீர்வாதமும் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கின்றது.

குடும்பத்தைப் பொறுத்தவரை மனக்குழப்பங்கள் நீங்கி ஓரளவு முன்னேற்றம் இருக்கும். நண்பர்கள் உறவினர்கள் வருகை இருக்கும். மற்றவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உங்கள் பணியை நீங்களே செய்து முடியுங்கள். காதலில் உள்ளவர்களுக்கு மனதில் சந்தோஷம் ஏற்படும். கண்டிப்பாக மனதிற்கு பிடித்தவரை கரம்பிடிக்க கூடிய சூழல் ஏற்பட்டுவிடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடையை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்யுங்கள் கண்டிப்பாக வெற்றி வந்து சேரும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 5                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பச்சை

Categories

Tech |