தனுசு ராசி அன்பர்களே.! எதையும் யோசித்து பொறுப்பாக இருந்து வழி நடத்த வேண்டும்.
இன்று எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் கொஞ்சம் கவனமாக செய்ய வேண்டும். இறைவனிடம் பரிபூர்ணமாக வணங்கி எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். அவசரம் பட கூடாது. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே மற்றவரிடம் உரையாட வேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். சிறியதாக ஏதேனும் ஒரு கருத்தை சொல்லி விட்டாலும் அது உங்களுக்கு பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். பார்த்து பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். உங்களுடைய ராசியில் சந்திராஷ்டமம் தினம் நுழைய இருப்பதினால் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது ரொம்ப நல்லது. தொழிலில் வளர்ச்சி கூடுவதற்கு இறைவழிபாட்டை மேற்கொள்வது மிகவும் சிறப்பு ஏற்படுத்தும். உத்தியோக முயற்சியில் வெற்றி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நண்பர்களின் ஆதரவு பெருகும். வாக்கு கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். எதையும் யோசித்து பொறுப்பாக இருந்து வழி நடத்த வேண்டும்.
எல்லாம் உங்களுக்கு சிறப்பாக நடக்கும். வாக்கு வன்மையால் காரியங்களில் வெற்றி இருக்கும். மனதிற்கு பிடித்தமான இடத்திற்கு சென்று வர முடியும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். காரியங்களில் கண்ணும் கருத்துமாக ஈடுபடவேண்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். மதிநுட்பம் வெளிப்படும். ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். காதல் விவகாரங்கள் மனதிற்குள் சந்தோஷத்தை கொடுத்தாலும் சில நேரங்களில் வருத்தத்தை கொடுக்கும். காதலில் மனக்குழப்பத்தை விட்டுவிடவேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: இளம் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு