தனுசு ராசி அன்பர்களே.! மிகவும் கவனமாக பேசுவது நன்மையை கொடுக்கும்.
இன்று கடமை தவறாமல் வேலைகளை சிறப்பாக செய்தாலும் நல்ல பெயர் இருக்காது. ஏனென்றால் ராசியில் உங்களுக்கு சந்திராஷ்டமம் நுழைந்து விட்டதினால் கொஞ்சம் கடினமான சூழல் இருக்கும். மன குழப்பம் ஏற்படத்தான் செய்யும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க வேண்டும். பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களுடைய கருத்துக்களுக்கு எதிர்ப்பு சிலர் கூறக்கூடும். எதிர்த்துப் பேசாமல் அமைதியா கையாள வேண்டும். மாணவர்கள் எவ்வளவு படித்தாலும் பாடங்கள் கொஞ்சம் கடினமாகத்தான் தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை கொடுக்கும். வீண் கனவுகள், ஆசைகள் தோன்றும். திடீர் கோபம் தோன்றும். மிகவும் கவனமாக பேசுவது நன்மையை கொடுக்கும். சக நண்பர்களை விட்டுப் பிரியக் கூடிய சூழல் இருக்கும். பணம் வரும் வாய்ப்பு உள்ளது.
எதிர்த்து செயல்பட்டவர்கள் ஓரளவு ஒதுங்கி விடுவார்கள். பிரச்சனைகளை பெரிதுபடுத்தாமல் இருக்க வேண்டும். வாக்குறுதிகள் கொடுக்கக் கூடாது. ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. யாரைப் பற்றியும் விமர்சனம் செய்யக்கூடாது. பொறுப்பான நபராக இருக்க வேண்டும். காதல் கொஞ்சம் தெளிவில்லாமல் இருக்கும். குழப்பங்கள் நிறைந்து காணப்படும். நீங்கள் புரிந்து கொண்டு பொறுமையாக செயல்பட வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள்