தனுசு ராசி அன்பர்களே.! முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
இரு எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். அவரிடம் அன்பாக பேசி எதையும் சாதித்துக் கொள்ளுங்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரக்கூடும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை இன்று வாங்கி விடுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயர முடியும். எல்லா விஷயத்தையும் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருப்பீர்கள். நவீன முறையைக் கையாண்டு முன்னேற்றகரமான சூழலை உருவாக்கிக் கொள்வீர்கள். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
விவசாயத் துறையில் உள்ளவர்களுக்கு நீர்வரத்து தாராளமாக இருக்கும். பொருளாதாரம் உயரும். குடும்பத்தில் கண்டிப்பாக நல்லது நடக்கும். பிரச்சனைகள் இருக்காது. காதலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் கூடும். காதல் கண்டிப்பாக கைகூடும். சிக்கலாக உள்ள காதல் கூட கண்டிப்பாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு இன்று புத்துணர்ச்சி இருக்கும். கல்வியில் உங்களால் மேம்பட முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்