தனுசு ராசி அன்பர்களே.!
இன்று அனைவரிடமும் நீங்கள் அக்கறையுடன் நடந்து கொள்வீர்கள். பண வரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும். உங்கள் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும் குழப்பங்களுக்கு விடை கிடைத்துவிடும். மனக்கசப்புகள் மாறிவிடும். தொழிலில் கூட்டாளிகளும் அன்பை வெளிப்படுத்துவார்கள். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு செயலில் இருந்த மந்த நிலை நீங்கி தெளிவு பிறக்கும். காரியத்தில் சின்னதாக தடை தாமதம் இருக்கும். குடும்ப பிரச்சனைகளை பற்றி யாரிடமும் பேச வேண்டாம். யாரிடமும் உங்களுடைய மனக்கவலை பற்றி பேச வேண்டாம். இன்று குடும்பத்தைப் பொறுத்தவரை மூத்த சகோதரருடைய உடல் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.
தந்தையிடம் வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று காதலில் உள்ளவர்கள் மிகவும் தைரியமாக காணப்படுவீர்கள். காதலில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் இருக்கின்றது. இன்று மாணவர்களைப் பொறுத்தவரை கல்வியில் அக்கறை வேண்டும். பெற்றோர்கள் என்ன சொல்கிறார்களோ அதனை கேட்டு நடக்க பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிற ஆடையை அணிய வேண்டும். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் சிறப்பாக செய்யுங்கள் மிகவும் நல்லது.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெளிர் நீலம்