தனுசு ராசி அன்பர்களே.! செய்யும் காரியங்களில் முன்னேற்றம் காணப்படும்.
இன்று ஆசைகள் நிறைவேற ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். ஆலய வழிபாட்டை மேற்கொள்ள முடியாத சூழல் இருந்தாலும் இல்லத்தில் நீங்கள் இறைவனை பரிபூரணமாக நினைத்து வழிபடுங்கள். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது மிகவும் நல்லது. நண்பர்களால் கொஞ்சம் ஏமாற்றம் இருக்கும். அதை பற்றி கவலைப்பட வேண்டாம். பயணங்களின் போது கவனம் தேவை. உடமைகள் மீது கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு சூழல் இருக்கின்றது.
தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றியை கொடுக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்யும் போது வேகம் வேண்டாம். இன்று உத்தியோகத்தில் நல்ல பெயரை உங்களால் எடுக்க முடியும். சிலருக்கு வீடு மாற்றம் வாகன மாற்றம் போன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடும். இன்று காதலில் உள்ளவர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். இன்று மாணவர்கள் எதையும் துணிந்து செய்ய வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்யுங்கள் கண்டிப்பாக முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு