தனுசு ராசி அன்பர்களே.! பழைய நண்பர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகி செல்லும்.
இன்று சந்தோச வாய்ப்புகளை சந்தித்து மகிழும் நாளாக இருக்கும். பயணங்கள் உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய முயற்சிகளில் தடை தாமதம் இருந்தாலும் மாலை நேரத்திற்கு பிறகு சரியாகும். வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி சென்றுவிட வேண்டும் என்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். சிந்தனைகள் அதிகமாகும். செயல்பாடுகள் வியக்கும் வகையில் இருக்கும். கஷ்டங்கள் எல்லாம் நீங்கி விடும். படிப்படியாக முன்னேறி செல்ல கூடிய சூழல் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களின் ஆதரவு இருக்கும். பழைய நண்பர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகி செல்லும்.
பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும். சகோதர சகோதரிகளிடம் வார்த்தைகளில் தெளிவு வேண்டும். பெண்களுக்கு சமூக அக்கறை அதிகமாக இருக்கும். சமூக பொறுப்புகளுடன் எந்த ஒரு வேலையிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு குழப்பங்கள் மிகுந்து காணப்படும். காதலின் நிலைபாடுகள் கொஞ்சம் கவலையை ஏற்படுத்தும். மாணவர்கள் எதையும் தெளிவாக சிந்திக்க வேண்டும். சிந்தனையை ஒருமைப்படுத்தி முடிவுகளை எடுக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு அதிர்ஷ்டமான எண் 3 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள்