தனுசு ராசி அன்பர்களே.! பிரச்சனைகள் பெரிதாக இல்லை.
இன்று அனைவரிடமும் எதார்த்தமாக பழகுவீர்கள். மற்றவர்கள் சொல்லக் கூடிய கருத்துகளை ரொம்ப ஆழமாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் பதில் கொடுப்பீர்கள். புத்தி கூர்மை வெளிப்படும். நிதானமான போக்கு இருக்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். முக்கியமான பயணங்களை மேற்கொள்வதற்காக திட்டங்களை தீட்டுவீர்கள். வாகனத்தில் மிதவேகத்துடன் செல்ல வேண்டும். இன்று தொழில் சம்பந்தமாக அலைச்சல் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த அளவில் முன்னேற்றம் கிடைக்கும். கடன்கள் அனைத்தும் படிப்படியாக குறைந்து மனதில் நிம்மதி உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சனைகள் சரியாகி கைகளுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
குடும்பத்தை பொறுத்தவரை பிரச்சினைகள் பெரிதாக இல்லை. குடும்பத்தில் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு ஏற்படும். சகோதர சகோதரிகளுடன் வாக்குவாதம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மனதிற்கு பிடித்தவர்களை கரம் பிடிக்க கூடிய சூழல் உருவாகும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் மிகவும் நல்ல நாள். கல்விக்காக எடுக்கக்கூடிய முயற்சியிலும் விளையாட்டுத்துறையில் எடுக்கக்கூடிய முயற்சியிலும் வெற்றி கண்டிப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் நீங்கள் செய்துவந்தால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் வெள்ளை