Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! வாக்குறுதிகள் வேண்டாம்….! தெளிவு வேண்டும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! காரியங்கள் தடை பெற்றாலும் பின்பு நன்றாக நடந்து முடியும். 

இன்றைய நாள் கண்டிப்பாக வளர்ச்சி கூடும். ஆனால் இன்று முதல் சந்திராஷ்டமம் தினம் இருப்பதினால் மனதிற்குள் குழப்பங்கள் இருக்கும். சிலருக்கு வீடு வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் சந்திராஷ்டமம் முடியட்டும் பின்னொரு நாளில் வாங்கிக்கொள்ளலாம். சிலருக்கு எல்லாம் இருந்தும் மனதில் குழப்பங்கள் இருக்கும். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சி கை கூடும். பழைய கடன்களை கொடுத்து மகிழக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சு மூலம் காரிய வெற்றி ஏற்படும். புத்தி தெளிவுடன் எதையும் செய்ய வேண்டும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டும். எதையும் சமாளிக்க கூடிய திறமை இருக்கின்றது. காரியங்கள் தடை பெற்றாலும் பின்பு நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாடு செல்வதற்கான சூழல் இருக்கும்.

வாக்குறுதிகள் கொடுக்க கூடாது. ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். நண்பர்களை மதித்து நடக்க வேண்டும். விட்டுக்கொடுத்து சென்றால் மென்மேலும் முன்னேற்றம் கிடைக்கும். குடும்ப ஒற்றுமைக்காக திட்டங்கள் இருக்கட்டும். காதல் வியப்பை ஏற்படுத்தும். காதலில் கசப்பு இருக்கும். விட்டுக்கொடுத்து சென்றுதான் ஆகவேண்டும். மாணவர்களுக்கு பொறுப்பு கூடும். மாணவர்கள் எதையும் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். அவசரப்பட வேண்டாம். காரியத் தடை ஏற்பட்டாலும் கண்டிப்பாக நடந்து முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பச்சை

Categories

Tech |