Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! நிதானம் வேண்டும்….! எதிர்ப்புகள் நீங்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே .! எதிலும் நிதானமாக செயல்படுவீர்கள். 

இன்று வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாள். வரவும் செலவும் உங்களுக்கு சமமாக இருக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்த்தபடி நல்லது நடக்கும். லாபத்தை ஈட்டிக் கொள்ள முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல விதத்தில் நடக்கும். குடும்ப சூழ்நிலைகளை புரிந்து அதற்கு ஏற்றார்போல் திட்டங்களை தீட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வீண் அலைச்சல் தடை தாமதம் போன்றவை உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழிலில் போட்டிகள் கண்டிப்பாக குறையும். எதிலும் நிதானமாக செயல்படுவீர்கள். எந்த ஒரு பிரச்சனையையும் உடனுக்குடன் அணுகி வெற்றி கொள்வீர்கள்.

காரிய தாமதம் ஏற்பட்டாலும் இறுதியில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவிகளை செய்து கொடுப்பார்கள். செலவுகள் வந்தாலும் அதற்கு இணையாக வரவுகள் இருப்பதால் பெரிய கஷ்டம் இருக்காது. காதலில் நிதானம் வேண்டும். பெரிய அளவில் பிரச்சனைகள் இல்லாவிட்டாலும் ஓரளவு மனம் கொஞ்சம் வாடிக்கொண்டிருக்கும். சில விஷயங்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். மாணவர்களுக்கு தொடர்பில்லாத விஷயங்களில் பங்கு கொள்ள வேண்டாம். படிப்பை தவிர வேறு எதையும் நினைத்து பார்க்க கூடாது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 5                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: இளம் பச்சை மற்றும் மஞ்சள்

Categories

Tech |