தனுசு ராசி அன்பர்களே.! மனக்கவலை இருக்கும்.
இன்று நீங்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். சேமிப்பு பணம் கொஞ்சம் கரைந்துவிடும். செலவுக்காக கடன் வாங்க வேண்டிய சூழல் இருக்கும். மனக்கவலை இருக்கும். அதிக உழைப்பும் குறைந்த வருவாயும் தான் கிடைக்கும். நல்லது கெட்டதை நிர்ணயிப்பதில் தடுமாற்றம் ஏற்படும். உத்தியோக நிமித்தமாக வெளியிடத்தில் தங்குவதற்கான சூழல் இருக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். வேலையில் கவனம் வேண்டும். அதிகளவு கோபம் ஏற்படும். ஆனால் அதனை தடுத்து பொறுமையாக இருங்கள். சுயகௌரவம் பாதிக்கக்கூடிய நிலைமை இருக்கும்.
குடும்பத்தை பொறுத்தவரை கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் இருக்கக்கூடும். காதல் கொஞ்சம் கசக்கும் படியாக இருக்கும். காதலில் உள்ள நிலைபாடுகள் கொஞ்சம் கவனிக்கத்தக்க வகையில் இருக்கும். மாணவர்களுக்கு முடிவுகளில் தெளிவு இருக்கும். கல்வி மீது அக்கறை இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்தவொரு பணியில் நீங்கள் ஈடுபட்டாலும் வெற்றி நிச்சயம்.
அதிர்ஷ்டமான திசை: வட கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு