Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்…மகிழ்ச்சி நீடிக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே,  இன்று நன்மைகள் நடைபெறும் நாளாகவே இருக்கிறது. இல்லம் தேடி முக்கிய புள்ளிகள் வரக்கூடும். தொலைபேசி வழி தகவல்கள் தொலைதூர பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும். அரசியல் செல்வாக்கும் உயரும். எதிர்பாராத பணவரவு இன்று  இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.

குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இன்று காணப்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும், உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். அவர்களது கல்வியில் முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் காணப்பட்ட மெத்தன போக்கு நீங்கி சுறுசுறுப்பாக  செயல்படுவார்கள்.

பாடத்தை நன்றாக படிப்பார்கள்,  பிடிவாத குணத்தை மட்டும் இன்று  விட்டுவிடுங்கள், அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று  சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |