தனுசு ராசி அன்பர்களே.! கவனம் தேவை.
இன்று எதிலும் நீங்கள் நியாயமாக நடக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாழ்க்கையில் உயர்வு வரும்போது பணிவு வர வேண்டும். பணியிடத்தில் அதிகாரிகளை அனுசரித்து நடந்தால் பதவி உயர்வுகளை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். கொஞ்சம் விட்டுக்கொடுத்து சென்றால் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். பணவரவு அதிகரித்தாலும் கையில் இருக்காது. அதிவேகத்தில் செலவுகள் ஓடிக்கொண்டிருக்கும். முக்கியமான பணியை கவனத்துடன் செய்ய வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிக பணிச்சுமை இருக்கும். சகோதர சகோதரிகளிடம் வேற்றுமை பார்க்காமல் இருந்தாலும் அவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடிய காலகட்டமாக அமைகின்றது.
தயவு செய்து அதற்காக வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம். தொலைபேசி மூலம் வரும் தகவல்கள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கல்யாணக் கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் பெரிதாக இல்லை. காதல் கண்டிப்பாக மனதிற்கு பிடித்தவரை கரம்பிடிக்க கூடிய சூழல் ஏற்படுத்தும். மாணவர்களுக்கு இன்று சில முடிவுகள் எடுக்க கூடிய சூழ்நிலைகள் இருக்கின்றது. மேற்கல்வியில் சில குழப்பங்கள் இருக்கின்றது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள்