Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும்.. கோபத்தை குறைத்து கொள்ளுங்கள்..!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும் நாளாகவே இருக்கும். சொந்தங்களின் வருகை இருக்கும். குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள், தாய்வழி உறவினர்களால் தக்க பலன் கிடைக்கும், இன்று முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவார்கள், அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். வீண் வாக்குவாதங்களில் தயவுசெய்து ஈடுபடவேண்டாம். கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

வழக்கத்தை விட செலவு இன்று அதிகமாக இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை பேசும்பொழுது ரொம்ப நிதானமாகவே நீங்கள் பேசவேண்டும்.  எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டியிருக்கும். இன்று நிதானத்தை மேற்கொள்ளுங்கள். இறை வழிபாட்டை மேற்கொள்வதால் சிறு தொகையும் செலவிடக் கூடிய சூழல் இருக்கிறது.

இன்று மாணவ செல்வங்களுக்கு கல்வியில் கொஞ்சம் தடை இருக்கும். கூடுமான வரை விளையாடிவிட்டு பாடத்தை மட்டும் படிப்பது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று எந்த ஒரு விஷயத்தையும் முன்னேற்பாடுடன் செய்யுங்கள், சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்துமே ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

 அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

Categories

Tech |