Categories
ஆன்மிகம் ஜோதிடம்

தனுசு ராசிக்கு …..பாராட்டுகள் கிடைக்கும்…அந்தஸ்து மற்றும் கவுரவம் உயரும் ….

தனுசு ராசி அன்பர்களே…!! அரசு வழியில் எடுத்த முயற்சியால் அனுகூலம் கிட்டும் மற்றும் வருமானம் திருப்திகரமாக இருக்கும். உங்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்தவர்கள் உங்களை தேடி வந்து பாராட்டுவார்கள். தொழில் மாற்று சிந்தனையை பற்றி இன்று சிந்தனை செய்வீர்கள். கன்னிப் பெண்களுக்கு திருமணம் கை கூடும். ஆனால் வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். கலைத்துறையில் உள்ளவர்கள் சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும்.

குடும்பத்தினரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். கணவர் மற்றும் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். பொருளாதாரம் உயரும் மற்றும் சமூகத்தில் உங்களுக்கு மதிப்பும் அந்தஸ்தும் கூடும். இன்று மாணவக் கண்மணிகளுக்கு விளையாட்டுத் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் கொஞ்சம் கடுமையாக உழைத்து படியுங்கள். படித்ததை எழுதிப் பாருங்கள் இதை மட்டும் செய்யுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா மற்றும் நீல நிறம்

Categories

Tech |