Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…பெருமை உண்டாகும்…பண வரவு அதிகரிக்கும்…!

தனுசு ராசி அன்பர்களே …!    இன்று தீட்டிய திட்டம் வெற்றி பெறும் நாளாக இருக்கும். பணம் வரவு எதிர்பார்த்தபடி அமையும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் மாறும். தொழில் கூட்டாளிகளின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முன்வருவீர்கள். குடும்பத்திலிருந்த சண்டைகள் நீங்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும்.

புத்தி சாதுரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகளும் கிடைக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும் உங்கள் வசிகரமான பேச்சால் காதலில் வயப்படக்கூடிய சூழலும் இருக்கும். உங்களுடைய நிதி மேலாண்மை மிகவும் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.

அதுபோலவே காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல அப்படியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |