தனுசு ராசி அன்பர்களே …! இன்று குடும்பத்தினர் மத்தியில் செல்வாக்கு கூடும். செயல்களில் உற்சாகம் நிறைந்து காணப்படும். தொழில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோக பொருட்களை வாங்குவீர்கள். எவருக்கும் அவசரப்பட்டு வாக்குறுதி கொடுக்க மாட்டீர்கள். உங்களுக்கு வேலை செய்பவர்கள் உங்கள் சொல்லுக்கு கட்டுப்படுவது நன்மை கொடுக்கும்.
அரசாங்க வழியில் சலுகைகள் கிடைக்கும், குடும்பத்தில் குதூகலம் நிறையும். மனம் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். உங்களுடைய வசீகரமான பேச்சால் புதியதாக காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கும். உடலில் வசீகரத் தன்மை கூடி அனைத்து காரியங்களிலும் வெற்றி ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். புதிய முயற்சிகளை தயவுசெய்து இப்போதைக்கு வேண்டாம்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.