Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…தடைகள் ஏற்படும்…செலவுகள் கூடும்…!

தனுசு ராசி அன்பர்களே …!     எடுத்த முயற்சிகளில் எண்ணற்ற தடைகள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் சில மாற்றங்கள் செய்வீர்கள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். நட்பு பகை ஆகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். தொழில் வியாபாரத்தில் பணம் தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற போட்டி இருக்கும்.

இயந்திரம், நெருப்பு ஆகியவற்றை பயன்படுத்துவது ரொம்ப கவனமாக பயன்படுத்த வேண்டும். உதவி என்று வருபவருக்கு தயங்காமல் உதவிகளைச் செய்வீர்கள். மற்றவர்கள் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவதற்கு வாய்ப்பு இருக்கும். தயவு செய்து கொஞ்சம் நிதானமாக இன்று செயல்பட்டு தான் ஆகவேண்டும். வாகனத்தில் செல்லும் போது ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். ஆரோகியத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் வந்து செல்லும்.

அதாவது செரிமான கோளாறுகள் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினை இருக்கும். காதலர்கள் கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும், நிதானமாக செயல்பட வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சூரிய பகவான் வழிபாட்டிலும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |