தனுசு ராசி அன்பர்களே …! இன்று மறைமுக விமர்சனங்களும் தாழ்வு மனப்பான்மையும் வந்துச் செல்லும். உறவினர் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு உங்களை தொந்தரவு செய்வார்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வாகனத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள்.
சாமர்த்தியமாக செயல்பட்டு காரியத்தை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்லும் பணியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றியும் கிடைக்கும். நிதி மேலாண்மையில் மட்டும் எப்பொழுதும் ஓர் கவனம் இருக்கட்டும். உடல் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதே போல சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.