Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…தேவைகள் பூர்த்தியாகும்…பிரச்சனைகள் தீரும்…!

தனுசு ராசி அன்பர்களே …!   அடுத்தவர் விஷயத்தில் தயவுசெய்து கருத்துக்களை சொல்ல வேண்டாம். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். தொழிலில் ஈடுபட்டுள்ள இடையூறுகளை சரி செய்வதால் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். இன்று எதிர்பார்த்த காரியத்தில் ஓரளவுதான் அனுகூலம் இருக்கும்.

சிறுசிறு தடைகளும் அவ்வப்போது வந்து செல்லும். உத்தியோகம் தொடர்பான பிரச்சினைகள் தீரும். கடின உழைப்பால் வளர்ச்சி ஏற்படும். காதலர்கள் பொறுமையாக பேசிக்கொள்வது நன்மையை கொடுக்கும். எதை பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லது. கூடுமானவரை இன்று யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். வாக்குறுதிகளையும் தயவுசெய்து கொடுக்காதீர்கள்.

நான் பணம் பெற்று தருகிறேன் என்று எந்தவிதமான வாக்குறுதிகளையும் தயவு செய்து நீங்கள் கொடுக்க வேண்டாம்.  சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் . முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும் அதுபோலவே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

 அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிஷ்ட எண்கள்: 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |