Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…ஒத்துழைப்பு இருக்கும்…சிக்கல் உண்டாகும்…!

தனுசு ராசி அன்பர்களே …!  இன்று எடுத்த காரியம் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் இனிமையாக அமைய சில திட்டங்களைத் தீட்டுவீர்கள். அரசு வழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு இருக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும்.  ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். பல நாட்களாக நீங்கள் முயற்சி செய்து கொண்டிருந்த காரியம் நல்லபடியாக நடை பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கும்.

வீடு நிலம் வாங்குவதில் இருந்த சிக்கல்கள் கொஞ்சம் நீங்கும். புதிய நபர்களின் வருகையும் முக்கியஸ்தர்களின் உதவியும் கிடைக்கும். இனிதே சிறப்பான காரியத்தை நிறைவேற்ற வேண்டிய விஷயங்கள் தொய்வில்லாமல் நடக்கும். உத்தியோகத்தில்  உள்ள அதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். இன்று சுய சிந்தனையில் அக்கறை கொள்வீர்கள். சமூக அக்கறையுடன் சிந்திப்பீர்கள்.

உடல் ஆரோக்கியத்தில்  மட்டும் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அஅதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்:  7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஊதா நிறம்.

Categories

Tech |