தனுசு ராசி அன்பர்களே …! குடும்பத்தாரின் விருப்பங்களை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவிகளை செய்வார்கள். பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் இதனால் மதிப்புக் கூடும் நாள் ஆகத்தான் இருக்கும். சில நேரங்களில் துன்பம் வருவது போல் இருக்குமே தவிர எந்த ஒரு பிரச்னையும் வராது.
உங்களுடைய மனப்பிராந்தி அதிகமாகவே இருக்கும். தயவுசெய்து தேவையில்லாத விஷயத்திற்கு மனக்குழப்பம் மட்டும் அடைய வேண்டாம். மனதில் ஏதேனும் கவலையும் பயமும் அவ்வப்போது ஏற்பட்டால் இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். உங்களது பேச்சு உங்களுக்கு சில நேரங்களில் எதிர்ப்பை கூட உண்டாக்கி விடலாம். யோசித்துப் பேசுங்கள் உடல் ஆரோக்யத்தை பொருத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை சிறப்பாக உள்ளது.
செரிமானம் போன்ற பிரச்னைகள் மட்டும் வரக்கூடும் கவனத்தில் கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் எண்ணம் செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.