தனுசு ராசி அன்பர்களே …! இன்று உங்களின் அணுகு முறையில் நல்ல மாற்றமும் நல்ல பலனும் கிடைக்கும். அக்கம்பக்கத்துவர்கள் அதிகம் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பண வரவு சிறப்பாக இருக்கும். பெற்றோரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். இன்று பிரச்சனைகள் அற்ற நாளாகவே இருக்கும். விவேகத்துடன் நடந்து கொள்வீர்கள். சிலரது காரியங்கள் உங்களுக்கு வெறுப்பை உண்டாக்கும், இதில் மட்டும் கவனம் கொள்ளுங்கள். அவர்களிடம் எந்த விதமான கோபமும் படாதீர்கள்.
எந்த விஷயங்களையும் தீர விசாரித்து பேசுவது நன்மையை கொடுக்கும். அதே போல எந்த விஷயத்திலும் அலட்சியம் காட்டாமல் நடந்து கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். உஷ்டம் சம்பந்தமான பிரச்சினைகள் எழக்கூடும், பார்த்துக்கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும், அதுமட்டுமல்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும் .
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்