Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…நற்செய்திகள் கிடைக்கும்….மகிழ்ச்சி அதிகரிக்கும்….!

தனுசு ராசி அன்பர்களே …!   இன்று  மடல் மூலம் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். மற்றவர்கள் கடுமையாக நினைக்கும் வேலை ஒன்றை நீங்கள் மிகவும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன் வருவார்கள். பணி நிரந்தரம் பற்றிய தகவல்கள் வந்து சேரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும்.

பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.  வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சனை தீர பாடுபடுவீர்கள். காரியத்தடை தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருந்தாலும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் மிக சிறப்பாக இருக்கும்.

உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது மட்டும் நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். மேலும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

அதிஷ்ட திசை: வடக்கு

அதிஷ்ட எண்கள்:  1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |