தனுசு ராசி அன்பர்களே …! உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவைத் தொகை வந்து சேரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழ்ச்சி ஏற்படலாம். நல்ல வாய்ப்புகள் ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.
உங்களது பேச்சை மற்றவர்கள் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள் அதனால் ஒரு முறைக்கு இரு முறை அழுத்தம் திருத்தமாக நிகழ்வது ரொம்ப நிதானமாக பேசவேண்டும்.எந்த ஒரு காரியமும் இழுபறியாக இருந்து முடிவில் சாதகமான பலனையே கொடுக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருந்தாலும் நல்ல படியாகத்தான் வந்து சேரும். எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சரியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள் : 4 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.