தனுசு ராசி அன்பர்களே …! இன்று தனவரவு கூடும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும். எல்லாவகையிலும் நல்லதே உங்களுக்கு நடக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் விருத்தி ஏற்படும். பெயரும் புகழும் அதிகரிக்கும் நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கும் போது ரொம்ப கவனமாக இருக்கவேண்டும்.
புத்தி சாதுர்யத்துடன் தான் காரியங்களை நீங்கள் செய்து முடிப்பீர்கள். மற்றவரின் பாராட்டுக்கு இன்று ஆளாகக்கூடும். எதிர்பார்த்த பணம் கையில் வரும். எதிர்ப்புகள் விலகி செல்லும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வயிறு கோளாறு போன்றவை ஏற்படக்கூடும். எந்த காரியம் செய்தாலும் கொஞ்சம் தாமதித்து நடந்து முடியும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறம்.