தனுசு ராசி அன்பர்களே …! தொட்டதெல்லாம் துவங்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும். தெய்வீக காரியங்களில் மனதில் அமைதியை கொடுக்கும். அரிய சாதனைகள் புரிந்து புகழடைவீர்கள். அவசரப்பட்டு யாருக்கும் வாக்குகள் மட்டும் கொடுக்க வேண்டாம். உடல்நலனில் கவனம் கொள்ளுங்கள். வயிறு சம்பந்தமான உபாதைகள் வரக்கூடும்.
மிகவும் கவனமுடன் இருக்கவும். வருமானம் நல்லபடியாக தான் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லது. ஓரளவு மகிழ்ச்சியும் இருக்கும் தேவையில்லாத விஷயத்தில் மட்டும் மூக்கை நுழைத்துக் கொண்டு தயவுசெய்து சிரமத்திற்கு ஆளாக வேண்டாம். சகோதரிகளிடம் ஒற்றுமை ஏற்படும்.
காதலர்கள் இன்று பொறுமை காக்க வேண்டும். நிதானமாகத்தான் செயல்பட வேண்டியிருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மயில்நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மயில்நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மயில்நீலம் மற்றும் வெள்ளை நிறம்.