Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…கருத்து வேற்றுமை உண்டாகும்…மனஅமைதி ஏற்படும்…!

தனுசு ராசி அன்பர்களே …!   இன்று குடும்பத்தில் சந்ததி விருத்தி ஏற்படும். ஆரோக்கியம் சீராகவே இருக்கும். வியாபாரத்தில் லாபமும் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உங்களுக்கு திருப்தியைக் கொடுக்கும். இன்று இயந்திரம் ,நெருப்பு ,ஆயுதத்தை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக பயன்படுத்த வேண்டும். அதே போல யாரிடமும் வாக்குவாதங்கள் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள் வாக்குறுதிகள் எதுவும் கொடுக்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள்.

பொறுமையாக இருந்தாலே போதுமானதாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் பின்னர் சரியாகிவிடும் இருந்தாலும் நிதானத்தை எப்போதும் கடைபிடியுங்கள். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் கொஞ்சம் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்யவேண்டியிருக்கும். ஓரளவு ஆதாயம் தேடிக் கொள்ள முடியும். இன்று எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இருந்தாலே போதுமானதாக இருக்கும்.

மிக முக்கியமாக வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். உடல் ஆரோக்கியத்திலும் ஒரு கண் இருக்கட்டும். தேவையில்லாத உணவுகளை உண்டுவிட்டு பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் என்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்.

Categories

Tech |